Sunday, 24 September 2017

Basic Rosary Prayers (Tamil and English)

Sign of the Cross

In the name of the Father, and of the Son, and of the Holy Spirit. Amen.
பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.


Apostles’ Creed

I believe in God, the Father almighty, creator of heaven and earth,
பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்.

and in Jesus Christ, His only Son, our Lord,
அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன்.who was 

conceived by the Holy Spirit, born of the Virgin Mary,
இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து அர்ச்சிஷ்ட கன்னிமரியாயிடமிருந்து பிறந்தார்.

suffered under Pontius Pilate, was crucified, died, and was buried.
போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.

He descended to hell; the third day He rose again from the dead;
பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.

He ascended to heaven and is seated at the right hand of the Father;
பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார்.

from thence he shall come to judge the living and the dead.
அவ்விடத்திலிருந்து ஜீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார்.

I believe in the Holy Spirit, the holy Catholic Church,
பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன், பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்.

the communion of saints, the forgiveness of sins,
அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன், பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன்.

the resurrection of the body, and life everlasting.
சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன், நித்திய ஜீவியத்தை விசுவசிக்கிறேன்.

Amen.
ஆமென்.


Our Father

Our Father, Who art in heaven,
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,

Hallowed be Thy Name.
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.

Thy kingdom come,
உம்முடைய இராட்ச்சியம் வருக,

Thy will be done, on earth as it is in heaven.
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக.



Give us this day our daily bread,
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்,

and forgive us our trespasses,
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல,

as we forgive those who trespass against us;
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்;

and lead us not into temptation,
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்,

but deliver us from evil.
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

Amen.
ஆமென்.



Hail Mary

Hail Mary full of grace!
அருள் நிறைந்த மரியே வாழ்க!

The Lord is with thee.
கர்த்தர் உம்முடனே.

Blessed art thou amongst women,
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்வர் நீரே,

and blessed is the fruit of thy womb, Jesus.
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.



Holy Mary, Mother of God,
ர்ச்சிஷ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே,

pray for us sinners, now and at the hour of our death.
பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்.

Amen.
ஆமென்.


Glory Be

Glory be to the Father, and to the Son, and to the Holy Spirit.
பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக.

As it was in the beginning, is now, and ever shall be, world without end. Amen.
ஆதியிலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.


Fatima Prayer

O my Jesus, please forgive us our sins, save us from the fires of hell,
ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும், நரக நெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும்.

and lead all souls to Heaven, especially those in most need of Your Mercy.
எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும், உமது இரக்கம் யார் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களை மோட்சம் கொண்டு சேர்த்தருளும்.